×

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது: தேர்தல் அதிகாரி பிரகாஷ் பேட்டி

சென்னை: வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாதிரி வாக்கு எண்ணிக்கை மையங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று ஆய்வு செய்தார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், மாதிரி வாக்கு எண்ணிக்கை மையம் நல்ல முறையில் அமைக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். தேர்தல் நடவடிக்கைகள் முடியும் வரை வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பு தொடரும் என்றும் அனுமதியின்றி மையங்களுக்குள் யாரும் நுழைய முடியாது என்று தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல வருகிற மே 19ம் தேதி 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பயிற்சிகள் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி, வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கமளித்துள்ளதாகவும், தமிழ்நாட்டை பொறுத்தவரை தென்சென்னை பகுதியான வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மாதிரி வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை மையம் எந்த மாதிரியான அடிப்படை வசதிகளுடன் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த மாதிரி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags : Voting centers ,Prakash , Voting number centers, security, district election officer, Prakash
× RELATED சென்னையில் குடிசைப்பகுதிகள் 1970...