×

நாடாளுமன்ற தேர்தல்: எத்தனை தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன?.. பதிலளிக்க ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன, எத்தனை பேருக்கு படிவம் 12 வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தேர்தல் ஆணையம் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றலின் போது அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் முறையாக வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் வாக்குகள் செலுத்த முடியவில்லை என அரசு ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியிருந்தன.

ஆனால் காவலர்களுக்கு மட்டும் 90 ஆயிரம் வாக்குகள் சரியாக பதிவு செய்திருந்தார்கள், அவர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முறையாக தபால் ஓட்டுகள், குறிப்பாக படிவம் 12 முறையாக வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக சாந்தகுமார் என்ற அரசு ஊழியர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு முறையான ஒட்டு வழங்கப்படவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், கிருஷ்ணன்,  ராமசாமி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த தபால் ஓட்டுகள் தொடர்பான ஒரு முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

Tags : election , Parliamentary Elections, Postal Votes, Commission, Court
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...