உமிழ்நீரின் வேலை!

மனித உடலில் முக்கியமானவகைகளில் ஒன்று நமது உமிழ்நீர். நமக்குத் தெரியாமல் நம் வாயில் எப்போதும் ஈரத் தன்மையை தக்கவைத்து காத்து வருகிறது. உமிழ்நீர் இல்லையென்றால் நம் வாய் என்ன ஆகும்? இல்லை நமது உடல்தான் என்ன ஆகும்? என்று யோசித்து பாருங்கள். சாதாரணமாக உமிழ்நீரின் வேலை எது என்றால் நாம் உண்ணும் உணவினை செரிக்கச் செய்வது மற்றும் உடலில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் தன்மைகளைக் கட்டுப்படுத்துவது என்று மட்டும் நாம் நினைக்கிறோம். ஆனால், வாயில் உமிழ்நீர் சுரப்பது குறைந்தால் பாக்டீரியாக்களின் தன்மை அதிகரித்து நா வறட்சி, ஈறுகளில் வெடிப்பு போன்றவை ஏற்படலாம். உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்ஸைம்களைக் கொண்டது.

இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கு ஏற்றவாறும் மாறுபடுகிறது. உமிழ்நீரின் முக்கிய பணி உணவை ஜீரணமாக்குவது. உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நீடித்த ஆயுள் அமையும். உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்ஸைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் ஜீரணிக்க செய்ய உதவுகிறது. உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் கடினத்தன்மை அடைந்தாலும் அது நோயின் அறிகுறியாகும்.

Related Stories: