கண்களைக் காக்கும் இமைகள்..!

நம் கண்களுக்கு பாதுகாப்பு கவசமாக உள்ள இமைகள் மெல்லிய தோலால் ஆனவை. இவை நிமிடத்திற்கு 15 முதல் 20 முறை இமைக்கின்றன. ஒரு மணி நேரத்தில் 1,200 முறையும் நாள் ஒன்றுக்கு 28 ஆயிரம் முறையும் இமைக்கின்றன. ஒரு முறை கண் இமைக்க புள்ளி 3 வினாடிகள் ஆகின்றன. இப்படி இடைவிடாது இமைகள் இமைப்பது கண்களைப் பாதுகாக்கத்தான். தூசுகள், அதிக வெளிச்சம் ஆகியவற்றில் இருந்தும் கண்களைப் பாதுகாக்க கண் இமைகள் இமைக்கின்றன.

Advertising
Advertising

மழை பெய்யும்போதோ, காற்றில் தூசுகள் பறக்கும்போதோ இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன.கண் இமையோரம்  சுரப்பிகள் இருக்கின்றன. இமை மூடும்போது இவற்றில் நீர் சுரக்கும். இந்த நீர் கண்களுக்கு நன்மை செய்கிறது. அதாவது, விழிகள் வறண்டுபோகாமல் பாதுகாக்கிறது. மழைநீர், வியர்வை ஆகியவை கண்களில் விழாமல் ஒரு பக்கமாக வடியும்படி புருவங்கள் தடுப்பாக இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் கண் இமைக்கும் அந்த கண நேரத்தில் மனதிற்கு ஓய்வு கிடைப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

Related Stories: