வேலை செய்த வீட்டில் 14 சவரன் நகை கொள்ளை வேலைக்காரி மகள் சிக்கினார்

சென்னை: வேலை செய்த வீட்டில் 14 சவரன் நகையை திருடிய வேலைக்கார பெண்ணின் மகளை போலீசார் கைது ெசய்தனர். அவரிடம் இருந்து 10 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (38). இவர் நேற்று முன்தினம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘எனது வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் பீரோவில் வைத்திருந்த 14 சவரன் நகை மாயமாகி உள்ளது. வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எனவே அவரிடம் விசாரணை நடத்தி நகைகளை மீட்டு தர ேவண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

Advertising
Advertising

அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினி வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், வேலைக்கார பெண்ணின் மகள் ஐஸ்வர்யா (20), தனது அம்மா வேலை செய்யும் வீட்டிற்கு கடந்த வாரம் வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோவில் வைத்திருந்த 14 சவரன் நகைகள் திருடிச் சென்றது தெரியவந்தது.அதைத்தொடர்ந்து வேலைக்கார பெண்ணின் மகள் ஐஸ்வர்யாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

Related Stories: