அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் துப்பாக்கி தோட்டா பறிமுதல்: போலீஸ் தீவிர விசாரணை

சென்னை: செங்கல்பட்டில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புற நோயாளியாகவும், உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு 1000க்கு மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை அவசர சிகிச்சை பிரிவு அருகே துப்புரவு தொழிலாளி மாரி என்பவர் அங்கு சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது லிப்ட் அருகில் தங்க நிறத்தில் ஒரு பொருள் இருப்பதை கண்டு கையில் எடுத்து பார்த்தார். அது என்னவென்று தெரியாமல் சக ஊழியரிடம் காட்டினார். அது, துப்பாக்கி தோட்டா என்பது தெரிய வந்ததது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே மருத்துவமனை டீன் உஷா சதாசிவனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்து செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் டவுன் எஸ்.ஐ சந்திரசேகர் ேநரில் ஆய்வு செய்து தோட்டாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் துப்பாக்கி தோட்டா கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், ‘‘அரசு மருத்துவமனையில் இதுவரை மருந்து, ஊசி, பஞ்சு உள்ளிட்ட பொருட்களே அதிக அளவில் சுத்தம் செய்யும்போது காணப்படும். தற்போது துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டா கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி இங்கு வந்தது? என்று தெரியவில்லை. குண்டு தாக்கியவர்கள் சிகிச்சை பெறும்போது எடுத்து வீசப்பட்டதா? அல்லது வேறு யாரேனும் போட்டு சென்றனரா? என்பது தெரியவில்ைல’’ என்றனர்.

‘நவீன’ துப்பாக்கி ேதாட்டா

போலீசார் கூறுகையில், ‘‘இங்கு கைப்பற்றப்பட்டது போலீஸ் பயன்படுத்தும் துப்பாக்கியின் ேதாட்டா இல்லை. போலீஸ் பயன்படுத்தும் ேதாட்டாவின் அளவு பெரியதாக இருக்கும். தற்போது கண்டெடுக்கப்பட்ட தோட்டாவானது சிறிய அளவில் உள்ளது. இது, தற்காப்புக்கு அனுமதி பெற்று பயன்படுத்தும் நவீன துப்பாக்கியின் ேதாட்டா என்பது போல் தெரிகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தோட்டாவை தடய அறிவியல் பரிசோதனைக்கு சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

Related Stories: