கால் டாக்சியில் பயணித்த அரசு ஊழியரிடம் 10 சவரன் திருட்டு: டிரைவரிடம் விசாரணை

சென்னை: தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் ேராகிணி நகரை சேர்ந்தவர் நடராஜன் (63). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மகள் திருமணம், கடந்த வாரம் விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோயில் தெருவில் உள்ள மண்டபத்தில் நடந்தது. திருமணம் முடந்த பிறகு நடராஜன் தனது வீட்டிற்கு செல்வதற்காக கால் டாக்சி பிடித்து, அதில் பொருட்களை ஏற்றினார். அப்போது, 10 சவரன் நகை உள்ள பெட்டியை கார் டிரைவர் முருகனிடம் கொடுத்து பத்திரமாக வைக்கும்படி கூறியதாக தெரிகிறது.பின்னர், வீட்டிற்கு வந்த நடராஜன், திருமண வேலை பரபரப்பு காரணமாக நகை பெட்டியை திறந்து பார்க்கவில்லை என்று தெரிகிறது. நேற்று முன்தினம் காலை நகைப்பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த 10 சவரன் நகை மாயமானமாது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 இதையடுத்து விரும்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் கால்டாக்சி டிரைவர் முருகன், நகை பெட்டியை வாங்குவதும், பின்னர் அவர் வெளியே சென்று திரும்புவதும் பதிவாகி இருந்தது.இதனால் முருகன் மீது சந்தேகம் இருப்பதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடராஜ் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட கால் டாக்சி டிரைவர் முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: