முத்தரப்பு ஒருநாள் தொடர் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது வங்கதேசம்

டப்ளின்: முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில், வங்கதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை  வீழ்த்தியது. அயர்லாந்தில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 5வது போட்டியில் வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று முன்தினம் இரவு மோதின. டாசில் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247  ரன் எடுத்தது. அம்ப்ரிஸ் 23, ஷாய் ஹோப் 87, கேப்டன் ஹோல்டர் 62 ரன் எடுத்தனர். வங்கதேச பந்துவீச்சில் முஸ்டாபிசுர் ரகுமான் 4, மோர்டசா 3, மிராஸ், ஷாகிப் ஹசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Advertising
Advertising

அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 47.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்து வென்றது. தமிம் இக்பால் 21, சர்சவும்யா க்கார் 54, ஷாகிப் அல் ஹசன் 29, முஷ்பிகுர் ரகிம் 63, முகமது மிதுன் 43 ரன் விளாசி பெவிலியன் திரும்பினர்.  மகமதுல்லா 30 ரன், சப்பிர் ரகுமான் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஆஷ்லி நர்ஸ் 3, ரோச், ஹோல்டர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.முஸ்டாபிசுர் ரகுமான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் 4 லீக் ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் (10 புள்ளி), அயர்லாந்து (2 புள்ளி) அணிகள் இன்று  சம்பிரதாயமான கடைசி லீக் ஆட்டத்தில் கைகலக்கின்றன.17ம் தேதி நடைபெறும் பைனலில் வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் மோதவுள்ளன.

Related Stories: