இத்தாலி ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் கோலின்ஸ்

ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, அமெரிக்க வீராங்கனை டேனியலி கோலின்ஸ் தகுதி பெற்றார்.முதல் சுற்றில் டென்மார்க் நட்சத்திரம் கரோலின் வோஸ்னியாக்கியுடன் நேற்று மோதிய கோலின்ஸ், டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டில் 7-6 (7-5) என வென்று முன்னிலை பெற்றார். காயம் காரணமாக தொடர்ந்து  விளையாட முடியாமல் தடுமாறிய வோஸ்னியாக்கி, போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து கோலின்ஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு முதல் சுற்றில் சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக் 2-6, 6-3,  6-2 என்ற செட் கணக்கில் அனஸ்டேசியா செவஸ்டோவாவை (லாத்வியா) வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் ஆலிஸ் கார்னெட் (பிரான்ஸ்), ஜூலியா கோயர்ஜஸ் (ஜெர்மனி), கர்லா சுவாரெஸ் நவரோ (ஸ்பெயின்), கிறிஸ்டினா  மிளாடெனோவிச் (பிரான்ஸ்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா 6-4, 0-6, 2-6 என்ற செட் கணக்கில் டேவிட் காபினிடம் (பெல்ஜியம்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். முன்னணி வீரர்கள் நிக்  கிர்ஜியோஸ் (ஆஸி.), மரின் சிலிச் (குரோஷியா), ஜெரிமி சார்டி (பிரான்ஸ்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories: