துளித்துளியாய்....

* உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் சிறப்பாக பங்களிப்பார்கள் என முன்னாள் பயிற்சியாளர் டேரன் லீமேன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* கிரிக்இன்போ இணையதளம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஐபிஎல் கனவு அணி விவரம்: டோனி (கேப்டன்), வார்னர் (ஐதராபாத்), தவான் (டெல்லி), கே.எல்.ராகுல் (பஞ்சாப்), ரிஷப் பன்ட் (டெல்லி), ஆந்த்ரே ரஸ்ஸல் (கொல்கத்தா), ஹர்திக்  பாண்டியா (மும்பை), ஷ்ரேயாஸ் கோபால் (டெல்லி), காகிசோ ரபாடா (டெல்லி), பூம்ரா (மும்பை), தாஹிர் (சென்னை).
Advertising
Advertising

* மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நடந்த ஐபிஎல் பைனலின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்ததையும் பொருட்படுத்தாது, தொடர்ந்து விளையாடி வெற்றிக்காகப் போராடிய தொடக்க வீரர் ஷேன் வாட்சனின் மன உறுதி  ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. போட்டி முடிந்ததும் அவருக்கு 6 தையல் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரத்தத்தால் மஞ்சள் சீருடை நனைந்து சென்னிறமாக மாறிய நிலையில் வாட்சன் பேட் செய்யும் புகைப்படம் சமூக  வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: