ஐசிசி போட்டி நடுவராக ஜி.எஸ்.லஷ்மி நியமனம்

துபாய்: ஐசிசி போட்டி நடுவராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமை இந்தியாவின் ஜி.எஸ்.லஷ்மிக்கு கிடைத்துள்ளது.சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி போட்டி நடுவராக செயல்பட உள்ள முதல் பெண் என்ற கவுரவத்தை பெற்றுள்ள லஷ்மி (51 வயது), இந்திய அணி முன்னாள் வீராங்கனை ஆவார். இவர் இதுவரை 3 மகளிர் ஒருநாள் போட்டி மற்றும் டி20  போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார்.

Advertising
Advertising

இனி சர்வதேச போட்டிகளில் ஐசிசி போட்டி நடுவராக பணியாற்ற உள்ளார்.ஐசிசி மேம்பாட்டு நடுவர் குழுவில் ஆஸ்திரேலியாவின் எலாய்ஸ் ஷெரிடன் இடம் பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்த குழுவில் 8 பெண் நடுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: