ரூ.1,500 லஞ்சம் வாங்கிய நர்சுக்கு 3 ஆண்டு சிறை

வேலூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் மாடப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன்(30), விவசாயி. இவரது மனைவி சத்யா(27), கடந்த 2014ல் மாடப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கர்ப்பகால பரிசோதனைக்காக முனியப்பனுடன் சென்றார். அப்போது, அரசின் மகப்பேறு திட்ட நிதியுதவிக்காக நர்சு பத்மாவதியிடம் அணுகியுள்ளனர்.

Advertising
Advertising

அவர் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின்படி நர்சு பத்மாவதியிடம், முனியப்பன் ரூ.1,500ஐ கொடுத்தார். அப்போது பத்மாவதியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் பத்மாவதிக்கு 3 ஆண்டு சிறை விதித்து வேலூர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.

Related Stories: