மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் சாம்பியன்

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸுடன் (9வது ரேங்க்) மோதிய ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 3வது முறையாக மாட்ரிட் ஓபனில் கோப்பையை முத்தமிட்டார். முன்னதாக அவர் 2011 மற்றும் 2016ல் இங்கு பட்டம் வென்றிருந்தார்.

இந்த வெற்றியின் மூலமாக, ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து டென்னிஸ் தொடர்களில் தனது 33வது பட்டத்தை கைப்பற்றி ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலின் சாதனையை சமன் செய்தார். இந்த வரிசையில் நடால், ஜோகோவிச் தலா 33 பட்டங்கள் வென்று முன்னிலை வகிக்கின்றனர். ரோஜர் பெடரர் (28), ஆந்த்ரே அகாசி (17), ஆண்டி மர்ரே (14) அடுத்த இடங்களில் உள்ளனர்.

Related Stories: