ஜபிஎல் 2019 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ்

ஹைதராபாத் : ஜபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 149 ரன்களை  எடுத்தது. மும்பை அணி சார்பில் டி காக் 17 பந்துகளில் 29 ரன்களும், ரோகித் சர்மா 14 பந்துகளில் 15 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 17 பந்துகளில் 15 ரன்களும், கிஷன் 26 பந்துகளில் 23 ரன்களும் , குருனல் பாண்ட்யா 07 பந்துகளில் 07 ரன்களும் , ஹார்டிக் பாண்ட்யா 10 பந்துகளில் 16 ரன்களும் எடுத்தனர். பொல்லார்ட் 25 பந்துகளில் 3 சிக்ஸ், 3 பெளன்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை சார்பில் தீபக் சாகர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களையும், தாகிர், தாக்கூர் தலா இரண்டு  விக்கெட்களையும் வீழ்த்தினர்.

150 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 148 ரன்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்துள்ளது. சென்னை அணி சார்பில் டூ பிளஸிஸ் 13 பந்துகளில் 26 ரன்களையும், வாட்சன்80,ரொய்னா 8, அம்பதி ராயுடு 1, டோனி 2 ரங்களையும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: