×

ஜோலார்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அமோகம்

ஜோலார்பேட்டை: வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை அதிக அளவில் உள்ளதாக சமூக ஆர்வலர்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் முதல்  தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் இந்த தடையை மீறி கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஜோலார்பேட்டைமற்றும் கிராமப்பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களை இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான உணவகங்கள், மளிகை கடைகள், சுவீட் கடைகள் ஆகியவற்றில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

இதை கண்காணித்து தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள், கண்டும் காணாதது போல் சென்றுவிடுகின்றனர். ஓட்டல், மளிகைக் கடை, டீ கடை போன்றவற்றில் ஆய்வு செய்வதாகக் கூறி மாதம் ஒரு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு செல்வதாகவும், இதனால் பிளாஸ்டிக் பொருட்களை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளே அதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். மேலும் கேரிபேக், டம்ளர் அதிக அளவு விற்பனையால் ஜோலார்பேட்டை  பகுதிகளில் உள்ள கால்வாய்களில் மற்றும் குப்பைகளில் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Jolarpet , Jolarpet, plastic products
× RELATED ஆன்லைன் மது விற்பனை கோரியவருக்கு 50,000 அபராதம்