பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு: தி டெலிகிராப் இணையம் தகவல்

வாரணாசி: பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்வதற்காக 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3  கட்டங்களாக முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள  பிரதமர் மோடி, கால பைரவர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக, நேற்று மாலை வாரணாசிக்கு வந்த அவர் திறந்த வாகனத்தில் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டார். அவருக்கு சாலை நெடுகிலும் பா.ஜ.க தொண்டர்கள் திரண்டு மிகப் பெரும் வரவேற்பை அளித்தனர். ரோஜாப்பூக்களை  தூவி கோஷங்களை எழுப்பினர். பின்னர், வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்.

இதற்கிடையே, பிரதமர் மோடியின் பேரணிக்காக வாரணாசியின் சாலைகளை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவிடப்பட்டுள்ளதாக ‘தி டெலிகிராப்’இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடி  மீது தூவுவதற்காக டன் கணக்கில் ரோஜாப்பூக்கள் வாரணாசி நகருக்கு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருவதால் சாலைகளை சுத்தம் செய்ய எங்களுக்கு உத்தரவிடப்பட்டது, அதன்படி நாங்கள்  பணிகளை மேற்கொண்டோம்,” என அதிகாரிகள் கூறியுள்ளனர்.  வாரணாசி மாநகராட்சியின் 40 தண்ணீர் டேங்கர்கள், 400 பணியாளர்கள் இந்த பணிக்காக இரவு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வழக்கமாக வாரணாசியில்  விழாக்காலங்களில்தான் இதுபோன்ற சுத்தம் செய்யும் பணி நடக்கும். வாரணாசி சர்வதேச சுற்றுலா மையமாக உள்ளது. நகரத்தில் 70 சதவித வீடுகள் மட்டும்தான் குழாய் மூலமாக தண்ணீர் இணைப்பை பெற்றுள்ளன. மற்ற  வீடுகள் போர் தண்ணீரை நம்பியுள்ளன. இப்போது சாலையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்ட நீரால் சுமார் 30 சதவீத மக்கள் தண்ணீரின்றி தவித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: