பாபநாசம் லோயர்டேம் சாலை சீரமைக்க வனத்துறை முன்வருமா?: சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

வி.கே.புரம்: பாபநாசம் லோயர்டேம் சாலையை சீரமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்ைக விடுத்து உள்ளனர். காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில், பாபநாசம் அணை, சேர்வலாறு, முண்டந்துறை ஆகிய பகுதிகளுக்கு பாபநாசத்தில் இருந்து லோயர்டேம் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் ஏராளமான வாகனங்கள், இச்சாலையை கடந்து செல்கின்றன. குறிப்பாக விடுமுறை நாட்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட வாகனங்கள், லோயர் டேம் சாலையை பயன்படுத்துகின்றன. மேலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இந்த வழியாகத்தான் செல்கின்றன.  

ஆனால் சுமார் ஒரு கிலோ மீட்டார் தொலைவிற்கு லோயர்டேம் சாலை, குண்டும் குழியுமாக உள்ளது. இந்த பகுதி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இப்பகுதியில் விபத்து ஏற்படும்முன் வனத்துறையினர் லோயர்டேம் பகுதியிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சரணாலய பகுதிக்குள் அனுமதி கிடைக்குமா?...