×

பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான வீடியோவை வாட்ஸ்அப்-ல் வெளியிட்ட இருவர் கைது: காவல்துறை நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த 18-ம் தேதி முதல் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. என்ன காரணம் என்றால் ஒரு சமுதாயத்தினரை இழிவு படுத்தும் விதமாக மற்றொரு சமுதாயத்தினர் வாட்ஸ் ஆப்பில் தகவலை பரப்பியது தான் இதற்கு காரணம். கடந்த 18-ம் தேதி இது தொடர்பாக புகார் மனு பொன்னமராவதி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டது. ஆனால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கடந்த 18-ம் தேதி முதலே போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த 18-ம் தேதி மாலை மாவட்ட எஸ்.பி. இந்த போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்திருந்தார். அதன்படி இந்த போராட்டமானது அன்று விளக்கிக்கொள்ளப்பட்டது. மீண்டும் கடந்த 19-ம் தேதி காலையில் இருந்து இந்த போராட்டமானது வலுத்தது. இதற்கு காரணம் என்றால் இழிவு படுத்தியவர்களை கைது செய்யவில்லை என்பதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதுவரை ஏன் இந்த கைது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பு அந்த சமுதாயத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது புதுக்கோட்டை பொன்னமராவதி மற்றும் இல்லாமல் அதனை தாண்டி சிவகங்கை மாவட்டம், மதுரை மாவட்டம் வரை போராட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் அந்த சமுதாயத்தினர்  குற்றவாளியை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, சாலைகளில் மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் பனை மரங்களை ஆங்காங்கே ரோட்டின் நடுவே வெட்டிப்போட்டு, பனையபட்டியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவை இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் பிறப்பித்தார். இந்த தாக்குதலை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான வீடியோவை வாட்ஸ்அப்-ல் வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், வசந்த் ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கப்பூரில் பணியாற்றிய செல்வவகுமாரை சென்னை வரவழைத்து போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponnaravarathi, Watts, Two, Arrested, Police
× RELATED சித்த மருத்துவர் தணிகாச்சலம் மீது...