விவசாயிகள் மனம் கோணாமல் 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி

கொடைக்கானல்: சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் விவசாயிகள் மனம் கோணாத வகையில் மாற்று வழியில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது,‘‘மக்கள் நலன் கருதி முதல்வரும், துணை முதல்வரும் முடிவு செய்து பாஜ மற்றும் இதர கட்சிகளுடன் கூட்டணி  வைத்தோம். ஓட்டுக்கு நாங்கள் ஏன் பணம் தர வேண்டும்? ஓட்டுக்கு பணம் தருகிறோம் என்று யார் சொன்னது?

தங்கத்தமிழ்செல்வனும் இடம் மாறி போய் விட்டார். அவர்களுக்கு தகுந்தாற்போல் பேசி வருகிறார். ராஜீவ் கொலை  குற்றவாளிகள் 7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு தடையாக இல்லை. சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் விவசாயிகள் மனம் கோணாத வகையில் மாற்று வழியில் சிந்திக்கப்பட்டு செயல்படுத்தப்படும். அதனால்தான் தீர்ப்பை  எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதில்லை என முதல்வர் அறிவித்துள்ளார்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED விவசாயிகளுக்கு அழைப்பு...