2021ம் ஆண்டு இறுதிக்குள் ஆயிரம் புதிய ரயில்கள் அறிமுகம்?

* பணிகள் மும்முரம்

இந்தியாவில் பெரம்பூர் ஐசிஎப், உத்திரபிரதேச ரேபரேலியில் மார்டன் கோச் தொழிற்சாலை, பஞ்சாப் மாநில கபூர்தாலாவில் ரயில் பெட்டி தொழிற்சாலை மற்றும் மேற்கு வங்காளத் ஹால்டியா என நான்கு இடங்களில் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் 2018-19, 2019-20, மற்றும் 2020-21 நிதியாண்டுகளில் பயணி கள் ரயில்களுக்கான 19ஆயிரத்து  169பெட்டிகள் உற்பத்தி செய்வதற்கான அட்ட வணையை ரயில்வே வாரியத்தின் மெக்கானிக்கல் என்ஜினியரிங் இயக்குநர் (உற்பத்திபிரிவு) கோவிந்த்பாண்டே கடந்த ஜனவரி மாத இறுதியில் வெளியிட்டார்.

இந்த அட்டவனைப்படி, கடந்த 2018-19 நிதியாண்டு 6ஆயிரத்து 58 பெட்டிகள் தயாரிக்க வேண்டும். இதில் 6ஆயிரத்து 37ரயில் பெட்டிகள் தயாரித்து முடிக்கப் பட்டன. 2017-18 நிதியாண்டு 4 ஆயிரத்து 470 பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப் பட்டன. ரயில் பெட்டி தொழிற் சாலைகளின் உற்பத்தி திறன் 35சதவீதம் கூடுதலாகி இருக் கிறது. இதனால் வரும் ஆண்டுகளில் நாடு முழுவதும் புதிய ரயில்கள் அதிக எண்ணிக்கையில் அறிமுகப்படுத்தப்படுமா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணை பொது செயலாளர் மனோகரன் கூறுகையில், ஆண்டுக்கு சுமார் 1300 காலாவதியான ரயில் பெட்டிகளை மாற்ற புதுப்பெட்டி கள் தேவைப் படுகின்றன. மீதம் உள்ளவைகள் புதிய ரயில்கள் இயக்க பயன்  படுத் தப்படுகின்றன. உற்பத்தி அட்டவனைப்படி, ஆண்டுக்கு 200 வீதம் 600 மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் ஹம்சாபர் ரயிலுக்கு தயாராகிறது. இதனைக் கொண்டு 30 ஹம்சாபர் ரயில்கள் இயக்கலாம்.

32 உலகத்தர ரயில் கள் இயக்க 640 பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது. 20 அந்தி யோத யா ரயில்கள் இயக்க 400 பெட்டிகள் தயாரிக்கப் படுகிறது. இதுதவிர 3 ஆயிர த்து 396 மெயின் லைன் இ.எம்யு பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதைக் கொண்டு 400குறுகிய தூர பயணிகள் ரயில்கள் இயக்கலாம். இந்த வகை ரயில்கள் சராசரி யாக 8 பெட்டிகளுடன் இயக்கப் படுகின்றன.

மேலும் 4 ஆயிரத்து 135 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 642 மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் , 255 இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், 76 இதர வகை குளிர்சாதன பெட்டிகள் தயாரிக்கப்பட இருக்கின்றன. முன்பதிவு அல்லாத தீனதயாளு பெட்டிகள் 1663 தயாரிக்கப்பட இருக்கிறது.எனவே ஏறக்குறைய 300 விரைவு ரயில்கள்  இந்தப் பெட்டிகளைக் கொண்டு அறிமுகப் படுத்தலாம்.

இதுதவிர 46 பகல் நேர விரைவு ரயில்களுக்கான 122 குளிர்சாதன மற்றும் 619 குளிர்சாதனம் அல்லாத இருக்கை வசதி பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட இருக் கின்றன. பெருமளவில் மின்சார ரயில் பெட்டிகள் தயாராகின்றன. ஒரு ரயில் அறிமுகப்படுத்த 10 முதல் 12 பெட்டிகள் போதும். இதுதவிர இரட்டை அடுக்கு குளிர்சாதன உதய் ரயில் ஒன்றும், அதிநவீன தேஜா ரயில்கள் இரண்டு இயக்கவும் பெட்டிகள் தயாரிப்பில் உள்ளன. ரயில் 20 பெட்டி கள் உற்பத்தி இந்த அட்டவனையில் வராது. ஆக திட்டமிட்டப்படி ரயில் பெட்டி கள் உற்பத்தியும் நடை பெற்று வருகிறது. எனவே வரும் 2021ம் ஆண்டுக்குள் ஏறத் தாழ 1000 புதிய ரயில்களை இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்த முடியும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: