திருவண்ணாமலை வேங்கிக்காலில் ₹78 லட்சத்தில் இயற்கை எழிலுடன் அறிவியல் பூங்கா

திருவண்ணாமலை :  திருவண்ணாமலையில் ₹78 லட்சத்தில் இயற்கை எழிலுடன் கூடிய அறிவியல் பூங்காவிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள ஏரியை ஒட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் ₹78 லட்சத்தில் இயற்கை எழிலுடன் கூடிய அறிவியல் பூங்கா மற்றும் விளையாட்டு பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

  சுமார் 50 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ள இப்பூங்காவில் குழந்தைகள் விளையாட சறுக்கு பலகைகள், நடைபயிற்சி மேற்கொள்ள பாதைகள், சிறுவர், சிறுமிகளை கவரும் வகையில் புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் பொம்மைகள் ,ஊஞ்சல் வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. மேலும், மாணவ, மாணவிகள் புரிந்து கொள்ளும் வகையில் அறிவியல் சம்பந்தமான காட்சிகளும் இடம்பெற உள்ளன.

மேலும், அறிவியல் பூங்காவில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் எந்திரவியல், இயற்பியல், ஓசை, சூழ்நிலைவியல், பொது அறிவியல் போன்ற உபகரணங்கள் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களும் அமைக்கப்படுகிறது. பூங்காவை சுற்றி பார்க்க வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதியும் ஏற்படுத்தி தரப்பட உள்ளது. இப்பணிகள் அனைத்தும் இன்னும் 2 மாதங்களில் முடிக்கப்பட்டு, பூங்கா சிறுவர், சிறுமிகளின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: