×

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஏப்ரல் 28,29 தேதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை :ஏப்ரல் 30ம் தேதி வடதமிழகம் அருகே புயல் வரும், புயலின் நகர்வைப் பொறுத்தே காற்றோ, மழையோ இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஏப்ரல் 28,29 ஆகிய தேதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் கடலோர மாவட்டங்களில் 30ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.இதனிடையே ரெட் அலர்ட் என்பது வானிலை ஆய்வு மையத்தால் கொடுக்கப்படுவதில்லை என்றும் கனமழைக்கான வாய்ப்புள்ள ஏதேனும் ஒரு பகுதி சிவப்பு நிறத்தில் காண்பிக்கப்படும் என்றும் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ocean ,region ,South West Bengal ,Meteorological Center , Binoculars, windmill, meteorological survey, deep sea, heavy rainfall
× RELATED பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த...