பி.எம் நரேந்திர மோடி படத்தை வெளியிட தடை : தேர்தல் ஆணையம் உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி : பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து பி.எம் நரேந்திரமோடி என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி பி.எம் நரேந்திர மோடி படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து காங்., சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் சமயத்தில் இப்படத்தை வெளியிடக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றத் படத்தை வெளியிட அனுமதி அளித்தது. இதனையடுத்து படத்திற்கு யுஏ தரச்சான்று வழங்கப்பட்டு ரிலீசுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதனை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தில் அரசியல் பிரசாரம் கிடையாது, உத்வேகம் அளிக்கும் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநதிமன்றம் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணையத்திற்கு திரையிட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது.

மேலும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இந்த திரைப்படத்தை பார்த்த தேர்தல் ஆணையம் படத்தை வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு சீலிட்ட உறையில் அறிக்கையாக வைத்து கடந்த ஏப்ரல் 22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது என கூறிய உச்சநீதிமன்றம், தேர்தல் முடியும் வரை பி.எம். நரேந்திர மோடி படத்தை வெளியிட தடை தொடரும் என உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: