பக்தர்கள் நடக்க சிரமம் : மழை பெய்ததால் கோவிலில் தேங்கி நிற்கும் தண்ணீர்

உத்தமபாளையம் : உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவிலில் மழை பெய்தால் உள்புறத்தில் தேங்கும் தண்ணீரை அப்புறப்படுத்திட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தமபாளையத்தில் பிரசித்தி பெற்ற திருக்காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் உள்ளது. இது  ராக, கேது பரிகார ஸ்தலமாக உள்ளதால் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.

இதனால் உள்புறங்களில் பல்வேறு வசதிகளை செய்து தர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கோவிலுக்குள் நுழைந்து செல்லும் முன்புற பாதையில் மழை பெய்தால் மழை நீர் தேங்கி கொள்கிறது. இதனால் பக்தர்கள் உள்ளே செல்வதில் சிரமம் உண்டாகிறது. மழை நீர் தேங்கியே உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியும் ஆகிறது. எனவே மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து குமரேசன் கூறுகையில், கோவிலின் உள்புறம் பக்தர்கள் செல்லும் பாதையில் மழைநீர் தேங்கி கொள்கிறது. இதனால் பக்தர்கள் நுழைய முடியாத நிலை உள்ளது. கொசுக்களும் உற்பத்தியாகிறது. எனவே இதனை அப்புறப்படுத்திடவும், மழை தண்ணீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: