ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுடெல்லி : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து கடந்த 2017 ம் ஆண்டு செப்., மாதத்தில் இருந்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞராக ராஜா செந்தூர் பாண்டியன், அப்பல்லோ மருத்துவமனை சார்பாக இரண்டு மருத்துவர்கள் இருந்து வருகின்றனர். சசிகலா உறவினர்கள், பொயஸ் கார்டனில் இருந்தவர்கள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஜெயலலிதா உறவினர்கள், பாதுகாவலர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

ஆனால் விசாரணை 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டதாக ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. அப்பல்லோ மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்று இன்று விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் எங்கள் தரப்பு மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் அடிக்கடி தேவையில்லாமல் ஆஜராகுமாறு உத்தரவிடுகின்றனர். மேலும் நாங்கள் ஆஜராகாவிட்டால் எங்கள் தரப்பு மருத்துவர்களை கைது செய்வதாக கூறி மிரட்டல் விடுவதாகவும் அப்பல்லோ சார்பில் வாதத்தை முன் வைத்தனர்.

மேலும் அப்பல்லோ மருத்துவமனையின் விளக்கங்களை ஆறுமுகசாமி ஆணையத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதால் சிறப்பு குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆறுமுகசாமி குழுவில் ஒரு மருத்துவர்கள் கூட இடம்பெறவில்லை. ஏற்கனவே 10,000 பக்க அறிக்கையை இந்த குழு தயாரித்துள்ளது. இந்த குழுவில் 21 மருத்துவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அவர்களால் தான் தங்களது விளக்கங்களை புரிந்து கொள்ள முடியும். இதனால் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும். முழுமையான குழு அமைத்து விசாரிக்கலாம், அதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்தனர். மேலும் ஆறுமுகசாமி ஆணையம் முழுமையாக உரிய முறையில் செயல்படவில்லை என குற்றம் சாட்டினர். இதனைடுத்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: