கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடி வீண் ராஜஸ்தான் வெற்றி

கொல்கத்தா : ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான நேற்றைய ஆட்டத்தில்,  டாஸ் வென்று ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக கிரிஸ் லயனும், கில்லும் களமிறங்கினர். ஆரோன் வீசிய முதல் ஓவரின் 3வது பந்திலேயே லயன் போல்டானார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸல், சுனில் நரைன் மற்றும் பரத்வொயிட் உள்ளிட்டோரும் ஏமாற்ற, இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் ஆடி ரன்கள் சேர்த்தார். கடைசிகட்ட ஒவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும் சிக்சருமாக பறக்கவிட்டார். இதனால், கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை சேர்த்தது. தினேஷ் கார்த்திக் இறுதி வரை ஆவுட் ஆகாமல் நின்று 50 பந்துகளில் (7 பவுண்டரி, 9 சிக்சர்) 97 ரன் எடுத்து 3 ரன்களில் சதத்தை தவறவிட்டார். வெற்றிக்கு 176 ரன்கள் தேவை என்கிற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி,19.2  ஒவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இளம் வீரர் ரியான் பராக் அதிரடியாக ஆடி 47ரன்கள் எடுத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி : ப.சிதம்பரம்