கலெக்டர் மீது சிவராஜ் சிங் புகார் நான் வந்த ஹெலிகாப்டரை தரையிறங்க அனுமதி மறுப்பு

போபால்; தான் வந்த ஹெலிகாப்டரை தரையிறங்க கலெக்டர் அனுமதி மறுத்ததாக தேர்தல் ஆணையத்தில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் புகார் அளித்தார்.மபி.யில் மக்களவை தேர்தல் வரும் 29ம் தேதி தொடங்கி 4 கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் சிச்சின்வாரா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த  பாஜ துணைத் தலைவரும், மபி முன்னாள்  முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானின் ஹெலிகாப்டரை தரையிறங்க கலெக்டர் அனுமதி மறுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக போபாலில் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் சிவராஜ் சவுகான் நேற்று வந்து  புகார் அளித்தார்.

முன்னதாக, நேற்று முன்தினம் இரவில் உம்ரேஷில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய சிவராஜ் சிங் சவுகான், ‘‘நான் மாலை 5.30 மணியளவில் இங்கு வந்தேன். ஆனால், கலெக்டர் 5 மணிக்கு பிறகு ஹெலிகாப்டர்  இறங்க அனுமதிக்க முடியாது என கூறிவிட்டதால் காரில் இங்கு வந்துள்ளேன்.இதற்கு பதிலளித்த கலெக்டர், ‘‘தேர்தல் நடத்தை விதிமுறைப்படி 5 மணிக்கு மேல் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதியில்லை,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: