×

திருப்பதி அருகே பரபரப்பு மாங்காய் மண்டியில் தீ விபத்து 1 கோடி பொருட்கள் சேதம்

திருமலை: திருப்பதி அருகே மாங்காய் மண்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ₹1 கோடி மதிப்பு பொருட்கள் சேதமடைந்தது.திருப்பதி அடுத்த தாமலசெருவு என்ற இடத்தில் மாங்காய் மண்டி  உள்ளது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் மாம்பழங்கள் கொள்முதல் செய்து, நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும்  ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் உள்ளூர் வியாபாரிகளும், இங்கிருந்து மாம்பழங்களை வாங்கி செல்கின்றனர். தற்போது மாங்காய் சீசன் என்பதால் வழக்கம்போல் நேற்று முன்தினம் மண்டிக்கு ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் வந்திருந்தனர். அப்போது மாங்காய்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த கொட்டகையில் திடீரென தீ  விபத்து ஏற்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த திருப்பதி தீயணைப்பு படை  வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கொட்டகைகள் முழுவதும் எரிந்து நாசமானது. இதில் ₹1 கோடி மதிப்புள்ள மாங்காய் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாக  கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து எம்ஆர்பல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fire accident ,Tirupathi , Fuck, Tirupati, Fire accident , Mangi Mango
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...