இளைஞர் நெஞ்சில் கத்தியால் குத்தியவர்தான் பிரக்யா: சட்டீஸ்கர் முதல்வர் விமர்சனம்

ஜாபல்பூர்: ‘‘பாஜ வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர், இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தியவர்,’’ என சட்டீஸ்கர் முதல்வர் விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மாலேகானில் 2008ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு  தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள  போபால் மக்களவை தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடுகிறார். இங்கு, காங்கிரஸ் சார்பில் அதன் மூத்த தலைவர் திக் விஜய் சிங் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், ஜபல்பூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சட்டீஸ்கர்  முதல்வர் பூபேஷ் சிங் பாகல், “பாஜ வேட்பாளரான பிரக்யா சிங் தாகூருக்கும், சட்டீஸ்கருக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அவருடைய உறவினர்  பிலாய்கரில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்தார். பிரக்யா எப்போதும் தன்னுடன் கத்தியை எடுத்து வருவார். 2001ம் ஆண்டு பிலாய்கரில் சைலேந்திர தேவகன் என்ற இளைஞரின் நெஞ்சில் பிரக்யா கத்தியால்  குத்திவிட்டார். மேலும், அவர் தகராறுகளில் ஈடுபடுவார். ஆரம்பத்தில் அவரது நடத்தை பழக்கப்பட்ட கிரிமினல் போன்று  இருந்ததே தவிர, சாமியார் போன்று இருக்கவில்லை,” என்றார். முதல்வரின் இந்த விமர்சனத்துக்கு மாநில பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: