கேதார்நாத் வெள்ளப்பெருக்கில் மாயமானவர்களை கண்டறிய எடுத்த நடவடிக்கை என்ன?: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

புதுடெல்லி: கேதார்நாத்தில் மாயமானவர்கள் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில் 2013ம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 4,200 பேர் மாயமானதாக கூறப்பட்டது. ஆனால், 3,322 பேர் மாயமானதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில்  600 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இயற்கையின் இந்த கடும் சீற்றம் நடந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மாயமானவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. டிஎன்ஏ பரிசோதனை நடத்தி தங்கள் உறவினர்கள்,  குடும்ப உறுப்பினர்களின் சடலங்களை அடையாளம் காண வேண்டும் என்று பாதிக்கப்பட்ட 900 குடும்பங்கள் அரசிடம் வலியுறுத்தி வந்தது. இதற்கு அரசு தரப்பில் இருந்து பதில் எதுவும் வரவில்லை.

 இந்த நிலையில், மாயமானவர்களின் கதி என்ன என்பது குறித்து டெல்லியை சேர்ந்த அஜய் கவுதம் என்பவர், உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தார். கடந்த 6 மாதங்களாக மாயமாக உள்ள  இவர்களை கண்டறிய சிறப்பு குழு அமைக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் மற்றும் நீதிபதி நாராயண் சிங் தானிக் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், வெள்ளத்தில் மாயமானவர்கள் கதி என்ன? அவர்களை மீட்க என்ன  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: