×

இடைத்தேர்தல் நடக்கும் சூலூரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அதிமுகவினருடன் ஆலோசனை கூட்டம்: திமுக எதிர்ப்பால் ஓட்டம்

சூலூர்:  கோவையை அடுத்த சூலூரில் வரும் மே 19ம் தேதி இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருக்கும் அம்பிகா என்பவர் நேற்று காலை பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம், மற்றும் போகம்பட்டி ஊராட்சிகளில் உள்ள  மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் அ.தி.மு.க.வினரை, பாப்பம்பட்டியில் உள்ள சமுதாய கூடத்திற்கு வரவழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர் தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து அ.தி.மு.க.வினர்  அதிகளவில் வர உள்ளதாகவும், அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர வேண்டும் எனவும், அதற்காக கூடுதல் நேரம் தண்ணீர் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சுகாதார பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழுவினர்  இதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆளும் கட்சியினருடன் சமுதாய கூடத்தில் ஆலோசனை கூட்டம் நடத்துவதை அறிந்த அப்பகுதி திமுகவினர் மற்றும்  பொதுமக்கள், கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து எதிர்ப்பு தெரிவிக்கவே, திடீரென்று கூட்டத்தை ரத்து செய்து விட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அம்பிகா அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து திமுக மற்றும்  கூட்டணி கட்சியினர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவிக்க உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : meeting ,AIADMK ,Sulur , by-elections, Deputy Regional Development,,AIADMK,DMK
× RELATED அண்ணாமலை சிறைபிடிப்பு: அதிமுக...