சீர்காழி அருகே நாங்கூரில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு குழாய் பதிப்பு

சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் விளைநிலங்களுக்கு இடையே கடந்த 2013ம் ஆண்டு எண்ணெய் நிறுவனம்  ஆழ்துளை கிணறு அமைத்து எரிவாயுவை எடுக்கும் பணியில்  ஈடுபட்டு  வருகிறது. இங்கு எடுக்கப்படும்  எரிவாயுவை மேமாத்தூரில் எண்ணெய் கிணறு அமைத்து அதனுடன் இணைத்து  அங்கிருந்து   நாகை நரிமண பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் இணைக்கும் திட்டத்தோடு செயல்படுகின்றது. மேலும்  தாண்டவன்குளத்திலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு 500 கிராமங்களுக்கு இடையே குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கூரில் விவசாயிகள் குழாய் பதிக்கும் பணியை தடுத்து தடுத்து நிறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி டிஎஸ்பி வந்தனா,  தாசில்தார் சபிதாதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.இந்தநிலையில், நேற்று  காலை 100 போலீசார் பாதுகாப்புடன் நாங்கூரில் விளை நிலங்களுக்கு இடையே மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை துவங்கினர். இதனால் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பு  ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: