வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடா? கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கரூரில் ஆய்வு

கரூர்:  கரூர் மக்களவை தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் செய்ததை தொடர்ந்து நேற்று கரூரில்    தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார். கரூர் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான கரூர் தளவாபாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.  இங்கு, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கடந்த 20ம் தேதி நேரில் பார்வையிட்டு, `மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை’ என்று  கூறியிருந்தார். இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் மனு அனுப்பினார். இந்தநிலையில், தமிழக  கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் நேற்று கரூர் வந்தார். அவர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆய்வின் முடிவில்தான் குறைபாடுகள் என்ன  என்பது தெரியவரும். இதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பேன் என்று தேர்தல் அதிகாரி ராஜாராம் நிருபர்களிடம் கூறினார். பின்னர் வேட்பாளர்கள், முகவர்களுடன்  ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு சென்றார். அப்போது, தனது காரை கேட்டுக்குவெளியே நிறுத்துமாறு கூறினார். உள்ளே இருந்த கார்களையும் வெளியேற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து கலெக்டர், எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளின் கார்களும் வெளியே நிறுத்தப்பட்டன. உள்ளே நடந்து சென்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும்  பாதுகாப்பு அறைகள் முன்பு சென்று  பார்வையிட்டார். 2 மணிநேரம் மேலாக ஆய்வு நடத்திவிட்டு வெளியேவந்து காரில் ஏறி புறப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: