8 கி.மீ. தூரம் டோலி கட்டி தூக்கி சென்றனர் மருத்துவ வசதியில்லாததால் குழந்தை பெற்றெடுத்த சிறிது நேரத்தில் தாய் சாவு: வேலூர் அருகே பரிதாபம்

அணைக்கட்டு: ஒடுகத்தூர் அருகே சரியான மருத்துவ வசதியில்லாததால், 8 கி.மீ. தூரம் டோலி கட்டி தூக்கி சென்ற கர்ப்பிணி, மருத்துவமனையில் குழந்தை பெற்ற சிறிது நேரத்தில் இறந்தார்.வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த பெரியதட்டாங்குட்டை மலை கிராமம் உள்ளது. மலையில் நூற்றுக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். ஆனால், இவர்களுக்கு சாலை வசதியில்லாததால் மண்  பாதையில் நடந்து செல்வார்கள். இங்கு கார்த்தி  மனைவி தமிலா(21) என்பவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு நேற்று காலை திடீரென பிரசவவலி ஏற்பட்டது.

உடனடியாக 8 கிலோ மீட்டர் தூரம் அவரை டோலி கட்டி தூக்கி கொண்டு மலை அடிவாரத்துக்கு தூக்கி வந்தனர். தகவல் அறிந்து, பீஞ்சமந்தை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பிரபு மற்றும் டாக்டர்கள்,  செவிலியர்கள் ஆம்புலன்சில் விரைந்து வந்தனர். தமிலாவுக்கு வலி அதிகமானதால் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சில நிமிடங்களில் தமிலாவுக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது.  இதற்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதையறிந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர், குழந்தையை எடுத்துக்கொண்டு, மீண்டும் டோலி மூலம் தமிலா சடலத்தை தங்களது கிராமத்துக்கு எடுத்து சென்றனர். இன்றைய டிஜிட்டல் யுகத்தில்,  டோலி கட்டி 8 கி.மீ. தூரத்துக்கு தூக்கி வந்ததால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் ேவதனையை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: