×

பிரதமரின் விதிமீறலை கண்டுக்கிறதே இல்ல...: தேர்தல் ஆணையம் மீது மாயாவதி குற்றச்சாட்டு

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரதமர் மோடி மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக பல்வேறு தீவிர குற்றச்சாட்டுக்கள் உள்ளன.  இருப்பினும், அவர் எந்த இடையூறும் இன்றி சுதந்திரமாக பிரசாரத்துக்கு சென்று வருகிறார். இதற்கு தேர்தல் ஆணையத்துக்குதான் நன்றி கூற வேண்டும். தேர்தல் ஆணையம் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை புறக்கணித்து, எந்த  நடவடிக்கையும் எடுக்காததால்தான் அவர் வரம்பு மீறி ெபண்களை பற்றி பேசிக்கொண்டே செல்கிறார்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் மற்றொரு பதிவில், ‘எதிர்க்கட்சிகளில் பிரதமர் பதவிக்கு தலைவர்கள் இல்லை என தொடர்ந்து பேசி, மக்களை மீண்டும் மீண்டும் பாஜ அவமானப்படுத்துவது ஏன்? நேருவிற்கு பிறகு யார் என்ற ஆணவம் பிடித்த  கேள்வி அப்போதும் கூட கேட்கப்பட்டது. முட்டாள்தனமான இதுபோன்ற கேள்விகளுக்கு மக்கள் ஒரு நல்ல பதிலை அளித்தார்கள். விரைவில் இதுபோன்ற பதிலை மக்கள் அளிப்பார்கள்’ என்று மாயாவதி கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mayawati ,Election Commission , Prime Minister, Infringement,Mayawati, allegation ,Election Commission
× RELATED வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்: மாயாவதி அழைப்பு