பதவியேற்பு விழாவுக்கு வருவீங்க... ஆனா, அது எங்க கட்சிக்கு மோடிஜி... நவீன் பட்நாயக் அதிரடி

ஒடிசாவில் 4வது மற்றும் கடைசிக்கட்ட தேர்தல் 29ம் தேதி நடக்கிறது. அங்கு அசைக்க முடியாத சக்தியாக ஆளும் பிஜேடி கட்சி இருந்தாலும், இந்தமுறை கொஞ்சமாவது கால் பதித்து விடவேண்டும் என ஆசைப்படுகிறது  தாமரை. அதற்காக, பிரதமர் மோடி ெதாடங்கி அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் என்று ‘ஷிப்ட்’ போட்டு மாற்றி, மாற்றி ஒடிசா வந்து பிரசாரம் செய்து ெகாண்டிருக்கிறார்கள்.எத்தனை பவுன்ஸ் போட்டாலும், லாவகமாக விலகிக் கொண்டு சிக்ஸ் அடிக்கும் அதிரடி பேட்ஸ்மேன் போல, தாமரை தலைவர்களுக்கு செம டெரர் கொடுக்கிறார் முதல்வர் நவீன் பட்நாயக். கடந்த செவ்வாய்கிழமை ேகந்திரபாரா  தொகுதியில் நடந்த பிரசாரத்தில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. கூட்டத்தில். ‘‘இந்த முறை ஆட்சி பீடத்தில் இருந்து வெளியேறப் போகிறோம் என்று பிஜேடி கட்சிக்காரர்களுக்கு தெரிந்துவிட்டது. அதனால்தான் வன்முறை  கலாச்சாரத்ைத கையில் எடுத்திருக்கிறார்கள். ஒடிசாவில் பாஜ அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சீக்கிரமே நான் இங்கு வருவேன்’’ என்று விளாசித் தள்ளியிருந்தார்.

மறுநாளே பதிலடி அட்டாக் நவீனிடம் இருந்து வந்தது. பாலசோர் தொகுதி பிரசாரத்தில் நவீன் பட்நாயக் பேசும்போது, ‘‘நமது மாநிலம் புயல், மழை, வெள்ளம், வறட்சி என்று இயற்ைகயின் கோரத் தாக்குதல்களால் சிக்கித்  தவித்தபோது, பாஜ தலைவர்களோ, பிரதமர் மோடியோ இந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. இப்போது தேர்தலுக்காக, ஓட்டுக்காக, அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். மூன்று கட்டத் தேர்தல்களிலேயே பிஜேடி  பெரும்பான்மை பெற்றுவிட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும்தான் பாக்கி. பிஜேடி அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு மோடிக்கு அன்புடன் அழைப்பு விடுக்கிறேன். மறக்காமல் வந்து சேருங்கள்...’’ என்று  அட்டாக் கொடுக்க, ஆடிப் போயிருக்கிறது பாஜ.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: