எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்கும்...வீரப்ப மொய்லி கருத்து

ஐதராபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி நேற்று அளித்த பேட்டி:மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு நிச்சயமாக பெரும்பான்மை பெறாது. எனவே, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் இடையே தேர்தலுக்கு முந்தைய  கூட்டணி அல்லது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி நிச்சயமாக இருக்கும். பிராந்திய கட்சிகளான டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பிஜேடி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்டவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலோ அல்லது தேசிய  ஜனநாயக கூட்டணியிலோ இடம் பெறவில்லை.

ஆனால், இவர்களுக்கான பொது எதிரி யார் என்பது தான் கேள்வி? அனைத்தையும் ஒன்றிணைத்து பார்த்தால் அவர்களின் எதிரி நரேந்திர மோடியும், பாஜ.வும்தான். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மட்டுமே அதிக இடங்களை கைப்பற்றும். தேர்தலுக்குப் பிறகு மோடி இங்கு இருக்க மாட்டார். பாஜ.வும் இருக்காது. அப்போது, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: