திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சரவணன் வேட்பு மனு தாக்கல்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றில் 18 தொகுதிகளுக்கு கடந்த 18-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. 4 தொகுதிக்கும் வேட்புமனு தாக்கல் 22ம் தேதி தொடங்கியது.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் நேற்று காலை 11 மணிக்கு திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் தொகுதி தேர்தல் அதிகாரியான பஞ்சவர்ணத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக டாக்டர் சரவணன் மனைவி கனிமொழி மனு தாக்கல் செய்தார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (72), தூத்துக்குடி அருகேயுள்ள தெய்வச்செயல்புரத்தைச் சேர்ந்த பரமசிவம் என்ற அக்ரி பரமசிவம்(34), கீழவல்லநாட்டைச் சேர்ந்த மாரியப்பன் (49) ஆகிய 3 பேரும் சுயேச்சைகளாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: