தமிழகத்தில் நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து கண்மாய்கள், குளங்களையும் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர்களுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த  கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் உள்ள அணைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அகற்றவில்லை.

மேலும், நீர்த்தேக்க பகுதிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்தால் அடுத்த ஆண்டுக்குள் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகும் என நிதி ஆதியோக் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி நீர்த்தேக்கங்களை பாதுகாக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்க பகுதிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் நேற்று விசாரித்து பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் உள்ள அனைத்து கண்மாய்கள், குளங்களையும் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சிவகங்கை மாவட்ட கலெக்டர் தூர்வாருவதற்கென இயந்திரங்களை வாங்கியதுபோல, அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தூர்வாரும் பணிக்கு தேவையான இயந்திரங்களை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: