இன்டர்வியூ நடத்துவதாக கூறி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் மாணவிகளை அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு விருந்தாக்கிய காமக்கொடூரன்கள்: பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ வெளியீடு

பெரம்பலூர்: பெரம்பலூரில் வேலைக்காக இன்டர்வியூ நடத்துவதாக கூறி ஆபாச வீடியோ எடுத்து மாணவிகள், இளம் பெண்களை ஒரு கும்பல் விருந்தாக்கி உள்ளது. மேலும் அதிமுக எம்எல்ஏவின் ஆசைக்கும் இணங்கும்படி வற்புறுத்தி உள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பேசும் பரபரப்பு ஆடியோ வெளியாகி உள்ளது. பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷாமித்தலிடம் கடந்த 21ம் தேதி வக்கீல் அருள் என்பவர் கொடுத்த புகாரில், ‘‘பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பாலியல் பலாத்காரம் போன்று பெரம்பலூரிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகரும், போலி நிருபர் ஒருவரும், இன்னும் சிலரும் கும்பலாக இதில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது’’ என்று கூறியிருந்தார். இதையடுத்து, எஸ்.பி. திஷாமித்தல் உத்தரவின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) சுப்புலெட்சுமி, அதிமுக முக்கிய பிரமுகர், போலி நிருபர், இன்னும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். பின்னர், அருளுக்கு சம்மன் அனுப்பி ஆதாரங்களை தரும்படி கேட்டார். கடந்த 23ம் தேதி தனிப்படை ஏடிஎஸ்பி ரங்கராஜன், இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி ஆகியோர் முன்னிலையில் வக்கீல் அருள் ஆஜரானார்.

அப்போது பாதிக்கப்பட்ட பெண் கதறும் ஆடியோவை ஏடிஎஸ்பியிடம் வக்கீல் அருள் போட்டு காட்டினார். ஆனால், ஆடியோவை ஒப்படைக்கவில்லை.

இந்தநிலையில், நேற்று காலை வக்கீல் அருள் ஆடியோவை வெளியிட்டார். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பத்திரிகையாளர்களை வரவழைத்து ஆடியோவை வெளியிட்டார். அதில் வக்கீல், பாதிக்கப்பட்ட பெண் இடையே நடந்த உரையாடல் வருமாறு:-

பெண்: ஹலோ வணக்கம் சார்....

வக்கீல்: ஹலோ சொல்லுங்கம்மா...

பெண்:  நான் இப்போ வெளியே வந்து பேசுறேன். பர்ஸ்ட்ல என்னாச்சுன்னா, பெரம்பலூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜுக்கு இன்டர்வியூவுக்கு வர சொன்னாங்க. அங்க போனோம், திடீர்னு இங்க இன்டர்வியூ கிடையாது. இன்னொரு ஓட்டலில் இன்டர்வியூனு சொன்னாங்க. சரின்னு சொல்லி மறுபடியும் அங்க போனோம்.

வக்கீல்: ரூம் நம்பர் ஒன் ஒன் போரா (114).

பெண்: ஒன் ஒன் போரா, ஒன் நாட் போரானு தெரியல சார். இன்டர்வியூ முடிஞ்சிருமோ என்னமோனு பதற்றத்தில கிளம்பி போயிட்டோம். அங்க போனா... அவுங்களுடைய நடவடிக்கை வேற மாதிரி இருந்தது.

வக்கீல்: யாருமா அங்க இருந்தா?

பெண்: அங்க 2, 3 பேர் இருந்தாங்க சார். அங்க இன்டர்வியூ நடக்குற மாதிரி தெரியல. பெரிய முதலாளி யாராவது ஹெட் ஆபீஸ்லேருந்து வந்திருப்பாங்களோனு நினைச்சோம். அங்க ரொம்ப வல்கரா பேசுனாங்க. ரொம்ப தப்பாவெல்லாம் நடந்துக்கிட்டாங்க. வாக்குவாதம் நடக்கும்போதே வீடியோவா வேற சூட் பண்ணீட்டாங்க. இதுக்கு ஒத்துழைக்கலனா வீடியோவ நெட்ல போட்டிருவோம்னு சொன்னாங்க.

என்னா பண்ணனும்னே எனக்கு தெரியல. அப்புறம் என்னன்னா மறுபடியும் கால் பண்ணி, அதிமுக எம்எல்ஏ பெயரை சொல்லி நீ அவர போய் பாக்க போகணும். அவுங்கக்கிட்ட நீ வரணும் என 2, 3 தடவை கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க. வர முடியாதுனு சொன்னா என்ன பண்ணுவீங்கனு கேட்டப்போ, உன்னுடைய வீடியோ எல்லாமே இருக்கு. அத கண்டிப்பா நெட்ல ரிலீஸ் பண்ணப்போறோம் அப்புடீனு சொன்னாங்க. அப்புறம் மறுபடியும் அந்த வீடியோவ மறுபடியும் எனக்கே அனுப்பி காட்டி, நீ வா நீ வானு கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க.

வெளியில தெரிஞ்சிருமோ, வீட்டுக்கு தெரிஞ்சிருமோ என பயந்து நான் போனேன். ரொம்ப கட்டாயப்படுத்தி குளிக்க போ என்றனர். குளித்தால் விட்டு விடுவார்கள் என நினைத்து குளிக்க சென்றேன். ஆனால் குளிக்கும்போது எனக்கே தெரியாமல் வீடியோ எடுத்து விட்டனர். அந்த வீடியோவையும் வெச்சு என்ன ரொம்ப பிளாக்மெயில் பண்ணினாங்க. இது வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகும். வெளியில சொல்ல முடியாம ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருந்தேன். ஒரு ஸ்டேஜ்ல சூசைடு அட்டண்ட் பண்ணக்கூட ரெடியாகிட்டேன். ஏன்னா வீட்டில் தெரிஞ்சா குடும்பத்தோட சாவாங்க.

வக்கீல்: அப்படியெல்லாம் பண்ணக்கூடாதும்மா... வீடியோ எடுத்த பையன் யார்?

பெண்: வேலுனு நினைக்கிறேன். பேரு சரியா தெரியலை.

வக்கீல்: நீங்க மட்டும்தான் அதில் இருந்தீங்களா வேற யாராவது இருக்காங்களா

பெண்: நிறைய புள்ளங்களை(மாணவிகள்) இப்படித்தான் பண்றாங்க.

வக்கீல்: உங்களுக்கு தொடர்ச்சியா த்ரட்டன் இருக்கா,

பெண்: ஆமா இருக்கு. நான் ஏன் எனது பெயர் சொல்ல மாட்டேங்கிறேன். நேர்ல வர மாடடோங்கிறேன்னா ரொம்ப மிரட்டுறாங்க. வீட்ட விட்டு வெளியே போக முடியலை, 2 நாளா சொந்தக்காரங்க வீட்டில் தங்கி இருக்கோம். என் பெயர் வெளியில் வரக்கூடாது.

வக்கீல்: உச்சநீதிமன்ற தீர்ப்புபடி பெயர் வெளியிட்டால் அவங்க மேல லீகல் ஆக்‌ஷன் எடுப்பாங்க. அதனால உங்க பேரை வெளியிட மாட்டோம். இது பொள்ளாச்சிய மிஞ்சிய சம்பவம். இவ்வாறு உரையாடல் நடந்தது. ஆடியோ வெளியிட்டதால் தனக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றும் வக்கீல் கேட்டார்.

இதுபற்றி வக்கீல் அருள் கூறும்போது, இதுபோன்ற சம்பவங்கள் பெரம்பலூரில் பல பங்களாக்களிலும் நடந்து உள்ளது. இந்த சம்பவம் நடந்த ஓட்டலில் அதிமுக எம்எல்ஏ பெயரில் புக்கிங் செய்யப்பட்ட அறைகளுக்கான ஆவணங்கள் இப்போது வேறு ஒருவர் பெயரில் மாற்றி ஆவணங்களை திருத்துவதாக தெரிகிறது. இதற்கு போலீசார் உடந்தையாக உள்ளனர் என்று கூறினார். மேலும் பல மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் கும்பலால் பாதிக்கப்பட்டது தொடர்பான ஆடியோக்கள் அருளிடம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஏடிஎஸ்பி ரங்கராஜன் மற்றும் போலீசாருடன் எஸ்.பி. திஷாமித்தல் ஆலோசனை நடத்தி வருகிறார். பொள்ளாச்சியை போன்று மற்றொரு பாலியல் சம்பவம், பெரம்பலூரில் உருவெடுத்திருப்பதால் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக எம்எல்ஏ பெயரை சொல்லி நீ அவர போய் பாக்க போகணும். அவுங்கக்கிட்ட நீ வரணும் என 2, 3 தடவை கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: