×

முரளி விஜய்க்கு வாய்ப்பு தருவாரா டோனி

சென்னை: ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழக வீரர் முரளி விஜய்க்கு இன்று நடைபெறும்  உள்ளூர் போட்டியிலாவது டோனி வாய்ப்பு தருவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல்  தொடரில் அதிக வெற்றிகளை குவித்த அணியாக  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. ஏறக்குறைய  தகுதிச் சுற்று போட்டியை சென்னை அணி உறுதி செய்துள்ளது.  எஞ்சிய போட்டிகளின் வெற்றி புள்ளிப் பட்டியலில் அதன் இடத்தை உறுதிச்  செய்யும். இந்நிலையில்  மும்பை இண்டியன்ஸ் அணியுடன் 2வது முறையாக இன்று மோதுகிறது சென்னை. இந்த அணி  ஏற்கனவே மோதிய போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்  பெற்றது. ஐபிஎல் தொடரில் இந்த அணிகள் இதுவரை 25 முறை மோதியுள்ளன. அவற்றில் மும்பை 14 முறையும், சென்னை 11 முறையும் வெற்றிப் பெற்றுள்ளன.

அதனால்  இந்தப் போட்டியின் மூலம் வெற்றி கணக்கை உயர்த்த சென்னை அணி முயற்சிக்கும.   சென்னையை பொறுத்தவரை வரை ஆடும் அணியில் மாற்றம் செய்வதில்லை. அதே  வீரர்களுக்கு  தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பதால் ஏதாவது ஒருப் போட்டியில் நன்றாக விளையாடி  அணியின் வெற்றிக்கு காரணமாகி விடுகின்றனர் அதனால்  இன்றைய போட்டியிலும் எந்த மாற்றமுமின்றி சென்னை அணி களமிறங்கும்.  அதனால்  இந்தப் போட்டியில்  முரளி விஜய்க்கு ஆட  டோனி வாய்ப்பளித்தால்  ஆச்சர்யம்தான். ஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கும்  டோனி, ஏனோ முரளி விஜய்யை  தொடர்ந்து பெஞ்சிலேயே உட்கார வைத்து விடுகிறார்.  மார்ச்சில் நடைப்பெற்ற சையத் முஷ்டக் அலி டி20 போட்டியில் சிறப்பாக  விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கிறார் முரளி விஜய். சென்னையை   ஏற்கனவே வீழ்த்திய உற்சாத்தில் களமிறங்கும் மும்பை அணியிலும் பெரிய  மாற்றம் இருக்காது. கடந்த 2 நாட்களாக சென்னையில் தீவிர பயிற்சியில்  ஈடுபட்டுள்ளது மும்பை. அந்த பயிற்சி பலன்  கொடுக்குமா என்பது இன்று தெரியும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhoni ,Murali Vijay , Dhoni get the chance, Murali Vijay?
× RELATED கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை...