×

கம்பீர் வழியில் ரஹானே

ஐபிஎல்  தொடரின் 11வது சீசனில்  டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெற்றிகளை பெற முடியாமல்  திணறியது. அதனால் தொடரின் நடுவில் அணியின் கேப்டனாக இருந்த கவுதம் கம்பீர்   கழற்றி விடப்பட்டார். அதற்கு பதில் எஞ்சிய போட்டிகளுக்கு  ஸ்ரேயாஸ் அய்யர்  கேப்டனாக நியமிக்கப்பட்டார். இப்போது அந்த அணி டெல்லி கேப்பிடல்ஸ் என்ற  பெயர் மாற்றத்துடன் களம் கண்டுள்ளது. அதே நேரத்தில் கேப்டனாக ஸ்ரேயாஸ்  அய்யர் தொடர்கிறார்.
அதே பாணியில் இந்த சீசனில்   ராஜஸ்தான்  ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அஜிங்கியா ரஹானே நீக்கப்பட்டுள்ளார்.  அதற்கு பதில் ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டேல் ஸ்டெயின் விலகல்

பெங்களூர் அணியில்  ஆஸ்திரேலியா வீரர் நாதன் கவுல்டர் ைநல்  இடம் பிடித்தார். ஆனால் காயம் காரணமாக  இந்த தொடரில் விளையாடவில்லை. அதனால் அவருக்கு பதிலாக தென் ஆப்ரிக்கா வீரர் டேல் ஸ்டெயின்(35) இடம் பிடித்தார். இடையில் விளையாட வந்த அவர் சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மட்டும்  விளையாடினார். இரண்டு போட்டிகளிலும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தார்.  தோள்பட்டையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக நேற்று முன்தினம் நடைப்பெற்ற பஞ்சாப் அணியுடனான ஆட்டத்தில் ஸ்டெயின் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தோள்பட்டையில் ஏற்பட்ட வீக்கத்துக்கு சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் ஸ்டெயின் அணியில் இருந்து விலகியுள்ளார். அதனை பெங்களூர் அணி நிர்வாகம் நேற்று உறுதி ெசய்தது.

வந்தார் வாஷிங்டன் சுந்தர்

பெங்களூர் அணியில் இடம் பிடித்திருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்(19).  ஆல் ரவுண்டரான இவர் கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎல்  தொடரில் இடம் பிடித்தார். அப்போது ரைசிங் பூனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 2018ம் ஆண்டு பெங்களூர் அணிக்காக 7 போட்டிகளில் பங்கேற்று 4 விக்கெட் எடுத்தார். இந்த சீசனில்  பங்கேற்ற முதல் 10 போட்டிகளில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நேற்று முன்தினம் பெங்களூர் அணி விளையாடிய 11வது போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. முதல் ஓவரில் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆனால் 2வது ஓவரில் 19 ரன்களை வாரி வழங்க 3வது ஓவர் வீச வாய்ப்பு தரப்படவில்லை. அதே நேரத்தில் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களான டிம் சவுத்தீ,  யஜ்வேந்திர சாஹலை விட குறைந்த ரன்களையே சுந்தர் நேற்று முன்தினம் விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக..

ஐபிஎல்  தொடரின் 12வது சீசனில்  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்  அணி பல நாட்களாக   புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடித்தது. இந்நிலையில்  நேற்று  முன்தினம் நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியதின்  மூலம்  பெங்களூர் அணி ஒரு இடம் முன்னேறி 7வது இடத்தை பிடித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahane ,Gambhir , Rahane , Gambhir way
× RELATED ரஞ்சிக் கோப்பையை வென்றது மும்பை அணி..!!