23வது ஆசிய தடகள போட்டி 17 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 4வது இடம்

தோஹா: கத்தாரில் நடைப்பெற்ற 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்க பதக்கங்கள் உட்பட 17 பதக்கங்கள் வென்று 4வது இடத்தை பிடித்தது. கத்தார் தலைநகர் தோஹாவில் 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைப்பெற்றது. இம்மாதம் 21 முதல் 24ம் தேதி நடைப்பெற்ற போட்டியில் இந்தியா உட்பட ஆசிய கண்டத்தில் உள்ள 43 நாடுகள் பங்கேற்றன. இதில் தமிழகத்தின் தங்க மங்கை கோமதி மாரிமுத்து 800மீட்டர் ஓட்டத்தில் இந்தியவுக்கு முதல் தங்க பதக்கம் வென்றார்.  குண்டு எறிதல் போட்டியில் தேஜின்தர் பால் சிங்கும், 1500மீ ஓட்டத்தில் சித்ரா உண்ணி கிருஷ்ணனும் தங்கம் வென்றனர்.

அதேபோல் தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவ் கலப்பு 4X400மீ தொடர் ஓட்டத்திலும்,  ஆண்களுக்கான  4X400மீ தொடர் ஓட்டத்திலும்  வெள்ளிப் பதக்கங்கள்  வென்றார். கடைசி நாளான நேற்று முன்தினம்  5000மீ ஓட்டத்தில் இந்தியாவின்  பரூல் சவுத்ரியும், 10,000மீ ஓட்டத்தில் இந்தியாவின் சஞ்சிவானி ஜாதவும் வெண்கல பதக்கம் வென்றனர். மேலும் ஆண்களுக்கான 10,000மீ ஓட்டத்தில்  கவித் முரளிகுமார் வெண்கலம் வென்றார். போட்டியின் முடிவில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 17 பதகங்களுடன் பதக்கப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மக்களின் பிரார்த்தனைக்கு பலனாக...