×

ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் சாய்னா, சிந்து, சமீர் காலிறுதிக்கு தகுதி

வுஹான்: ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின்  வுஹான்  நகரில்  நடைபெறுகிறது. இந்த போட்டியின் மகளிர் பிரிவின் 2வது சுற்று ஒன்றில் நேற்று  இந்தியாவின் சாய்னா நெஹ்வால், கொரியாவின்  கிம் கா எவுன் ஆகியோர் மோதினர். இதில் 38 நிமிடங்களில் சாய்னா 21-13, 21-13 என்ற நேர் செட்களில் கிம்மை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப் பெற்றார். இதேபோல் இன்னொரு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், இந்தோனேஷியாவின்  சொய்ருன்னிசாவும் மோதினார். சுமார் 33 நிமிடங்கள் நடைப்பெற்ற இந்தப் போட்டியில் சிந்து 21-15, 21-19 என்ற நேர் செட்களில் சொய்ரூன்னிசாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதிப் போட்டிகளில் சாய்னா, ஜப்பானின் அகானே யாமகுச்சியுடனும், சிந்து, சீனாவின்  கய் யான்யானுடனும் மோத உளளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில்  இந்தியாவின்  சமீர் வர்மா 21-12, 21-19 என்ற நேர் செட்டில் ஹாங்காங்கின்  கா லாங் அங்குசை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். அவர் காலியிறுதியில் சீனாவுடன் ஷி யுகி அல்லது தாய்லாந்தின் சித்திகோம் தாம்மாசினுடன் விளையாடுவார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sindhu ,Asian Badminton Championship Saina ,Samar Kairali , Sindhu, Sameer, Saina seal quarterfinal spots at Badminton
× RELATED இதில் அவளுடைய தப்பு எதுவும் கிடையாது!