×

ஜிஎஸ்டி வெற்றி

சென்னை எழும்பூரில் 2வது தென் மண்டல ஹாக்கிப் போட்டி நடைபெறுகிறது. நேற்று நடைப்பெற்ற லீக் போட்டி ஒன்றில் ஜிஎஸ்டி சென்னை - புனித பால் கிளப் அணியும் மோதின. அதில்  ஜிஎஸ்டி சென்னை அணி 9-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிப் பெற்றது.  இன்னொரு போட்டியில் டய்ஸ் பெங்களூர் அணி 6-1 என்ற கோல் கணக்கில் லயோலா கல்லூரி அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறும் போட்டியில் ஐசிஎப்- அசோக் ஆக்கி அகாடமி,  தெற்கு ரயில்வே - சென்னை ஹாக்கி சங்கம் அணிகள் மோத உள்ளன.

கோமதிக்கு 1 லட்சம்

சென்னை எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி தங்கள் முன்னாள் மாணவியான, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற  தமிழகத்தின் கோமதி மாரிமுத்துவை ஊக்குவிக்கும் வகையில் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : GST won
× RELATED சில்லி பாயின்ட்…