மலேசியாவிற்கு கடத்த முயற்சி 46.5 லட்சம் ஹவாலா பணம் அதிரடி பறிமுதல் : சிக்கிய பெண்ணிடம் விசாரணை

சென்னை: சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கடந்த முயன்ற ₹46.5 லட்சம் அமெரிக்க கரன்சியை சுங்க அதிகாரிகள், பெண் பயணியிடம் இருந்து கைப்பற்றினர். இது கணக்கில் வராத ஹவாலா பணம் என தெரியவந்தது.  அந்த பெண்ணை கைது செய்து துருவி, துருவி விசாரித்து வருகின்றனர். சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு பாட்ரிக் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க அதிகாரிகள்  ஸ்கேன் மூலம் பரிசோதித்து அனுப்பினர். அப்போது மலேசிய நாட்டு குடியுரிமை பெற்ற தேவி (54) என்ற பெண் சுற்றுலா பயணி விசாவில் வந்து விட்டு  மீண்டும் மலேசியா செல்ல இருந்தார். அவரது கைப்பை மற்றும் சூட்கேசை சுங்க அதிகாரிகள் ஸ்கேன்   செய்தபோது அதில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கைப்பையை திறந்து பார்த்தபோது அதில் அமெரிக்க டாலர் கரன்சிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ₹16.5 லட்சம். அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரித்தனர். அப்போது, ஸ்ரீதேவி  மிகுந்த அலட்சியமாக பணத்தை பறிமுதல் செய்து விட்டீர்கள். இதோடு என்னை விட்டு விடுங்கள். நான் தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என கூறி சுங்க அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது,  அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

எனவே, பெண் சுங்க அதிகாரிகள், தேவியை தனி அறைக்கு அழைத்து சென்று மேலும் சோதனையிட்டனர். அப்போது அரது உள்ளாடைக்குள் கட்டுக்கட்டாக  வெளிநாட்டு கரன்சியை மறைத்து வைத்திருந்தார். ₹30 லட்சம்  மதிப்புடைய அமெரிக்க டாலர் கரன்சியை பறிமுதல் செய்தனர். மொத்தம் ₹46.5 லட்சம் மதிப்பு அமெரிக்க டாலர் வெளிநாட்டு பணத்தை சுங்க அதிகாரிகள் ைகப்பற்றினர். அதோடு ஸ்ரீதேவி பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள்  அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர். அதில், இது கணக்கில் வராத ஹவாலா பணம் என தெரியவந்தது. இந்த ஹவாலா பணத்தை சென்னையில் உள்ள யாரோ ஒருவர் இவரிடம் கொடுத்து மலேசியாவில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்கும்படி கூறியதாக தெரிகிறது. எனவே இந்த பணத்தை யார் கொடுத்தார், மலேசியாவில் யாரிடம்  பணத்தை ஒப்படைக்க கொண்டு வந்தார் என அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் ஏற்கனவே பலமுறை ஹவாலா பணத்தை கடத்தி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.    

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: