×

வாரணாசியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் மோடி

வாரணாசி: இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் 5 ஆண்டு ஆட்சியின் விரக்தியால், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நிலையில் காங்கிரசும், மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் பாஜகவும் வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தலை சந்தித்து வருகின்றன. அதன்படி ஏப்ரல் 11, 18, 23 தேதிகளில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், தெலங்கானா, திரிபுரா, சிக்கிம், கோவா, குஜராத், அந்தமான், சட்டீஸ்கர், அருணாச்சல பிரதேசம், அசாம், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளில் 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில்  போட்டியிட உள்ளார். வாரணாசியில் வரும் மே 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக இன்று வாரணாசிக்கு வந்த மோடி, நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக இன்று இன்று மாலை வாரணாசி வந்தார். பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து ஆதரவாளர்களுடன் மோடி 6 கி.மீ. தூரம் வரை பேரணியாக சென்றார்.

இதில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மண்டப்புரா மற்றும் சோனப்புரா பகுதிகளும் அடங்கும். இந்த பிரசார பேரணியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும், பாஜக ஆளும் மாநில  முதல்வர்களும் கலந்து கொண்டனர். இதேபோல் தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் பாகேற்றனர். வாரணாசியில் 2வது முறை போட்டியிடும் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அங்குள்ள கோயில்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. வழி நெடுகிலும்  சுவரொட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Varanasi , Varanasi, Modi nomination, Modi
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...