கஷ்டமான வேலையையும் சுலபமாக செய்வாளாம்... கையெழுத்து போட்டியில் கையில்லா சிறுமி சாதனை

நியூயார்க்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், பெடரிக் நகரில் உள்ள செயிண்ட் ஜான் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவி சாரா ஹின்ஸ்லி(10). இந்த சிறுமிக்கு பிறவியிலேயே கைகள் இல்லை. ஆனால் அதற்காக சோர்ந்துவிடவில்லை. பள்ளியில் சேர்ந்து, சக மாணவர்களுக்கு இணையாக போட்டிப்போட்டு படிப்பவர். இவர் தற்போது ஒரு பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது, அமெரிக்காவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான கர்சிவ் கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “எழுதுவது எனக்கு எப்போதுமே சிரமமாக இருந்ததில்லை. எழுதுவது எனக்கு சுலபமான விஷயம் தான். கர்சிவ் கையெழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். அது ஒருவகையான ஓவியம் போன்று உள்ளது”, என்கிறார்.

 

“சாராவிடம் இருந்து முடியாது என்ற சொல்லை கேட்டதே இல்லை. எவ்வளவு கஷ்டமான வேலையை தந்தாலும், அதை அவள் சுலபமாக, சிறப்பாக செய்துவிடுவாள்”, என புகழ்ந்து தள்ளுகிறார் சாராவின் ஆசிரியை செரில்.  சாராவின் தாய் ஹின்ஸ்லியோ, “எந்த வேலைக்கும் சாரா எப்போதும் எந்த ஒரு துணை கருவியையும் பயன்படுத்தியதில்லை. தனது இரண்டு முழங்கைகளை பயன்படுத்தி தான் அவள் அனைத்து வேலைகளையும் செய்வாள். செயற்கை கைகள் பொருத்திக்கொள்ளவும் அவள் மறுத்துவிட்டாள். சாரா எந்த ஒரு காரியத்தையும் தன்னால் சாதிக்க முடியும் என நம்புகிறாள். அவளுடைய இந்த நம்பிக்கை தான் அவளை எந்த காரியத்தையும் செய்ய வைத்துவிடுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் விரைவாக கற்றுக்கொள்வாள். பள்ளி நேரம் போக வீட்டில் சும்மா இருக்கும்போது, தனது அருகில் இருக்கும் விஷயங்களை ஓவியமாக வரைவது சாராவுக்கு பிடித்த விஷயம். அதுபோக, தனது தங்கை வெர்னிகாவுடன் விளையாடுவது, நீச்சல் அடிப்பது, பள்ளியில் செஸ் விளையாடுவதும் சாராவுக்கு பிடித்த விஷயங்கள்.

பரிசுக்காக காத்திருப்பு: கையெழுத்து போட்டிக்கான பரிசு, வரும் ஜூன் 13ம்தேதி தான் சாராவுக்கு கிடைக்கும். அந்த நாளுக்காக சாராவின் பள்ளியே ஆர்வமாக காத்திருக்கிறது. ஏனெனில், செயிண்ட் ஜான் பள்ளியில் இருந்து இதுவரை யாருமே இந்த பரிசை வென்றது இல்லை. சாரா தான் முதல் நபர் என்கிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கெத்தி ஸ்மித்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: