ரூ.10 நாணயம் வாங்க மறுப்பு வங்கியில் வியாபாரி தர்ணா: தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை: தஞ்சையில் உள்ள தனியார் வங்கியில் ரூ.10 நாணயம் செல்லாது என்று கூறியதால் வாலிபர் தர்ணா போராட்டம் நடத்தினார். தஞ்சை மகர்நோம்பு சாவடி பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்,பால் வியாபாரி. இவர் தினமும் பால் விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை வங்கியில் செலுத்துவது வழக்கம். நேற்று ஒரு வங்கியில் ரூ.1 லட்சத்தை செலுத்த சென்றார். இதில் 1000 ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்களாக வைத்திருந்தார். இதை வங்கி கணக்கில் செலுத்த வங்கி மேலாளர் வாங்க மறுத்தார்.

இதுகுறித்து கேட்டபோது 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று வங்கி மேலாளர் பதில் அளித்துள்ளார். இதனால் முத்துகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் மற்ற வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்கி வருகிறார்கள். ரூ.10 நாணயம் செல்லாது என்று அரசும் அறிவிக்கவில்லையே என்று கேட்டார். அதற்கு வாரத்தில் ஒரு முறை மட்டுமே 10 ரூபாய் நாணயம் வாங்குவோம் என்று வங்கி மேலாளர் கூறினார்.

இதனால் முத்துகிருஷ்ணன் வங்கிக்கு வெளியே வந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அங்கு பத்திரிகையாளர்கள் வந்து குவிந்தனர். இதை பார்த்ததும் வங்கி மேலாளர் அந்த நாணயங்களை வாங்கிக்கொண்டனர்.ரூ.10 நாணயம் செல்லும், அதை யாரும் மறுக்க கூடாது என ரிசர்வ் வங்கி கூறியும் வங்கிகளில் அதனை வாங்க மறுப்பதை அனைத்து தரப்பினரும் கண்டித்து உள்ளனர். இது குறித்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உரிய உத்தரவு வழங்க வேண்டும். ரூ.10 நாணயத்தை மறுக்கும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல பஸ்களிலும் ரூ.10 நாணயத்தை வாங்க மறுக்கிறார்கள். கண்டக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: