ரயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக கடந்த வருடம் மட்டும் 20,000 திருநங்கைகள் கைது: ரயில்வே அமைச்சகம் தகவல்

டெல்லி: கடந்த 4 ஆண்டுகளில் ரயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 73 ஆயிரம் திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் போது திருநங்கைகளால் தொல்லைகள் நேரிடுவதாகவும், அவர்கள் பணத்தை வலுக்கட்டாயமாக பறிப்பதாகவும் பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இச்சம்பவங்கள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

அதன்படி கடந்த 4 ஆண்டுகளில் ரயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 73 ஆயிரம்  திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநங்கைகள் இப்படி நடந்து கொள்வதற்கு சமூக புறக்கணிப்பே காரணம் எனவும், விரைவில் இந்த பிரச்னையை சரிசெய்ய திருநங்கைகள் குறித்த பொதுப்பார்வையை மக்களிடத்தில் மாற்றும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பொதுமக்கள் கூறிவருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: